March 16, 2019 தண்டோரா குழு
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றதில் இருந்து சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்லும் வரை மாஸான தமிழ் சினிமா வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை டிவீட்களாக பதிவிட்டு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
இதற்கிடையில் , 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் இருந்து 3 வீரர்களை மட்டும் விடுவித்து 22 வீரர்களை தக்கவைத்துள்ளது. தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களுள் ஹர்பஜன் சிங்கும் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டும் அவர் சென்னை அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்நிலையில், 12 வது ஐபிஎல் போட்டி சென்னையில் துவங்கவுள்ளது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடக்கவுள்ளது. இதற்காக சென்னை அணி வீரர்கள் சென்னைக்கு வந்துக்கொண்டிருகிறார்கள். அந்த வகையில் ஹர்பஜன்சிங்கும் சென்னை வந்துள்ளார். இதற்காக மாஸாக தமிழில் ட்வீட்டும் செய்துள்ளார்.
ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்,
பேரன்பிற்கும்,பெருமதிப்பிற்குரிய என்னருமை சென்னை ரசிகர்களே மீண்டும் ஐபிஎலில் பங்கேற்க தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன். ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான் அதே உணர்வு தான் என்னுள் இப்போது #WhistlePodu என பதிவிட்டுள்ளார்.