April 14, 2017
tamilsamayam.com
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் 12வது லீக் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன.
இதில் முதலில் ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதில் பெங்களூரு அணியில் இதுவரை கேப்டனாக இருந்த ஷேன் வாட்சன் நீக்கப்பட்டு ராட்ஷசன் கிறிஸ் கெயில் அணியில் இடம் பிடித்தார். தவிர, ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்பினார்.
இதே போல மும்பை அணியில், யார்கர் மலிங்காவுக்கு பதிலாக டிம் சவுத்தி இடம் பிடித்தார்.