February 24, 2018
tamilsamayam.com
கடந்த சில தினங்களாக ட்விட்டரில் முட்டி மோதிக்கொண்ட அஸ்வினையும், கிப்ஸையும் ஒரு பிறந்தநாள் ட்விட் ஒன்று சேர்த்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான தமிழக வீரர் அஸ்வின், தான் விளம்பரம் செய்யும் ஷூ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ், “இனிமேலாவது வேகமா ஓடுவாய் என நம்புகிறேன் அஸ்வின்” என்று கலாய்த்துள்ளார்.
இதனால் காண்டான அஸ்வின், “உங்களை மாதிரி ஓட முடியாது. ஆனால், நான் சூதாட்டம் செய்து அதில் சம்பாதித்ததை வைத்து சாப்பிடவில்லை” என்று கூறினார்.2000 ஆண்டில் சூதாட்ட புகாரில் சிக்கியதை குத்திக்காட்டும் வகையில் மிக மோசமாக விமர்சித்த அஸ்வினுக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். இதன்பின், அஸ்வினும் இதெல்லாம் காமெடி என்பது போல் சமாளித்துள்ளார். ஆனால், கிப்ஸ் அதை ஏற்காமல், அந்தப் பிரச்சனையிலிருந்து விலகினார்.
இந்நிலையில், ஹர்சல் கிப்ஸ் நேற்று தனது 44 பிறந்தநாளைக் கொண்டாடினார். இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, அஸ்வின் கிப்ஸுக்கு வாழ்த்து தெரித்துள்ளார். அதற்கு கிப்ஸும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களை மையமாக வைத்து இணையதளவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.