• Download mobile app
05 Dec 2024, ThursdayEdition - 3221
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் டோனி இல்லையா?

April 26, 2019 தண்டோரா குழு

12வது ஐபில் போட்டியின் லீக் சுற்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில்,தோனி தலைமையிலான சி.எஸ்.கே 11 போட்டிகள் விளையாடி 8 போட்டிகளில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டிக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. இந்த தொடரில் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் வான்கடே மைதானத்தில் 171 ரன்களை சேஸ் செய்த சென்னை அணி வெறும் 133 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதற்கிடையில், இன்று மும்பை சென்னை இடையேயான இரண்டாவது போட்டி இன்று சென்னை சேப்பாக் மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் சி.எஸ்.கே அணி வெற்றி பெறும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ஆனால், சி.எஸ்.கே. அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு தேவையான புள்ளிகளை பெற்றுவிட்டதால் முதுகுவலியால் சிரமத்தை சந்தித்து வரும் தோனிக்கு ஓய்வு வழங்கப்படுமா என சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்ஸியிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

தோனி எந்த ஒரு ஆட்டத்தையும் தவறவிட விரும்பவில்லை. சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை அவர் விரும்புகிறார். சென்னை நகரம், தோனியின் இதயத்துக்கு நெருக்கமான நகரமாக உள்ளது. அவர் விளையாடுவதையும் சிறப்பாக செயல்படுவதையும் விரும்புகிறார். அணி வெற்றி பெறுவதை பார்க்கவும் அவர் விருப்பம் கொள்கிறார். இதனால் அவருக்கு ஓய்வு கொடுக்க முயற்சி செய்வது என்பது கடினமான விஷயம். காயம் தொடர்பான விஷயத்திலும், ஓய்வு எடுப்பதிலும் தோனி என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மும்பை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க