ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது.
இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் ஐதராபாத்தில் நடக்கும் 48வது லீக் போட்டியில், மும்பை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஐதராபாத் அணியில், சிராஜ்க்கு பதில் நெஹ்ராவும், வில்லியம்சனுக்கு பதில் முகமது நபியும் இடம் பெற்றனர். மொத்தம் மூன்று மாற்றங்கள் என சொன்ன வார்னர். மூன்றாவது வீரரின் பெயரை மறந்துவிட்டதாக காமெடியாக தெரிவித்தார்.
ரோகித் ஆறுதல்:
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு சிம்மன்ஸ் (1), பார்த்தீவ் படேல் (23) சுமாரான துவக்கம் அளித்தனர். ரானா (9), பாண்டியா (15) கைகொடுக்கவில்லை.
பின் வந்த போலார்டு (5), கரண் சர்மா (5) ஏமாற்றினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா (67) அரைசதம் கடந்தார். இதையடுத்து மும்பை அணி, 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் மட்டும் எடுத்தது.
இதுவே மோசம்:
இதன்மூலம் இந்த ஆண்டு பங்கேற்ற ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமான ஸ்கோரை மும்பை அணி பதிவு செய்தது.
திருப்பூரில் பிரத்யேக வைர மற்றும் தங்க ஆபரண ஷோரூமை க்ளோ பை கீர்த்திலால்ஸ் தொடங்கியுள்ளது
கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்