April 5, 2018
tamilsamyam.com
இந்த ஆண்டு எப்படியும் ஐபிஎல்., கோப்பையை கைப்பற்றுவதே தனது இலக்கு என பெங்களூரு அணி கேப்டன் கோலி 120 சதவீதம் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் வரும் 7ம் தேதி துவங்குகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் 7 அணிகளுக்கு இந்திய வீரர்கள் கேப்டனாக உள்ளனர். ஐதராபாத் அணிக்கு மட்டும் வில்லியம்சன் கேப்டனாக உள்ளார்.
இந்நிலையில் இதுவரை நடந்துள்ள 10 ஐபிஎல்., தொடர்களில், கோலி தலைமையிலான பெங்களூரு அணி, மூன்று முறை ஃபைனலுக்கு சென்ற போதும் கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. ஆனால் இம்முறை கோப்பை வெல்வதில் உறுதியாக இருப்பதாக பெங்களூரு கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.