June 3, 2017
tamilsamayam.com
மூன்றரை வயதே ஆன சேலத்தை சேர்ந்த நேத்ரா என்ற சிறுமி சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் இரண்டு தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் நேத்ரா. துறு துறு என இருக்கும் நேத்ரா எப்போதும் கால்களில் ரெக்கை கட்டி பறந்து கொண்டு தான் இருப்பார். ஆம் ஸ்கேட்டிங் எனும் ரெக்கையை கட்டி பறப்பது நேத்ராவுக்கு மிகவும் பிடிக்கும்.
வெறும் மூனறை வயதாக இருந்தாலும், அவர் ஸ்கேட்டிங்கில் செய்யும் அட்டகாசம் மிகவும் அதிகம் தான். இவர் உள்ளூரில் நடந்த பல போட்டிகளில் கலக்கியிருந்தார்.
தற்போது தாய்லாந்தில் 6 வயதுக்குட்பட்டோருக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைப்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்ட நேத்ரா 500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் பிரிவுகளில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.