June 7, 2017
tamilsamayam.com
மூன்று நாடுகள் ஹாக்கி தொடரில் பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி 3-2 என வென்றது.
இந்தியா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர் ஜெர்மனி நாட்டின் டஸ்ஸல்ட்ரோப் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் திங்கட்கிழமையன்று பெல்ஜியம் – இந்தியா அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே அனல் பறந்த இந்த ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் அமவுரி முதல் கோல் போட்டார். அதற்கு பதிலடியாக 34வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் 34 மற்றும் 38வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 45வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் காசிஸின்ஸ் கோல் அடித்தார்.
இதனையடுத்து, ஆட்டத்தில் மேலும் சூடுபிடித்தது. கடுமையாகப் போராடிய இந்திய அணிக்கு 49வது நிமிடத்தில் ராமன்தீப் சிங் மற்றொரு கோல் போட்டு முன்னிலை பெற்றத்தந்தார். பின்னர், பெல்ஜியம் அணி பதில் கோல் போடும் முயற்சி பலிக்காததால், இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.