June 13, 2017
tamilsamayam.com
2017ஆம் ஆண்டுக்கான ஹாக்கி வேர்ல்டு லீக் தொடரின் அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் இன்னும் மூன்று தினங்களில் தொடங்கவுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஹாக்கி வேர்ல்டு லீக் தொடர் லண்டனில் இன்னும் மூன்று நாட்களில் தொடங்கவிருக்கிறது. இதில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி நான்கு நாடுகளை எதிர்கொண்டு விளையாடுகிறது.
ஜூன் மாதம் 15ஆம் தேதி ஸ்கார்ட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. கனடா அணியுடன் ஜூன் 17ஆம் தேதி மோதுகிறது. ஜூன் 18ஆம் தேதியே பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டு களமிறங்குகிறது.