December 14, 2019 தண்டோரா குழு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதில், இருபது ஓவர் போட்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி சென்னையில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார்.