March 17, 2017
tamilsamayam.com
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொல்வதாக கருதி கடைசியில் பல்பு வாங்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளில் முக்கியமான உத்தர பிரதேச மாநிலத்தில் 300க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பிரதமர் மோடியின் பா.ஜ., கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதே போல உத்தரகாண்ட், கோவா, மணிப்பூரில் பா.ஜ., ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி, தனது கிரிக்கெட் கமெண்டிரி ஸ்டைலில், டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். கடைசியில் அது அவருக்கே ஆப்பு வைத்து விட்டது.
ரவிசாஸ்திரி வெளியிட்ட கருத்தில்,’ உத்தர பிரதேசத்தின் பா.ஜ.,வின் சரித்திர வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மோடி, அமித் ஷா ஜோடி, 300 என்ற மைல்கல்லை டிரேசர் புல்லட் வேகத்தில் கடந்தது. ‘ என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி,’ நன்றி, உத்தரபிரதேச வெற்றி உண்மையான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. என நாசுக்காக தெரிவித்துள்ளார்.