February 20, 2018
tamilsamayam.com
நியூசிலாந்தில் நேற்று நடந்த இங்கிலாந்து – நியூசிலாந்து டி20 போட்டியின் போது 18 பந்தில் அரை சதம் விளாசி 3வது முறையாக சாதனைப் படைத்துள்ளார்.
நியூசிலாந்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடைப்பெற்று வருகின்றது.
நேற்று நடந்த இங்கிலாந்து – நியூசிலாந்து டி20 போட்டியின் போது, நியூசிலாந்து வீரர் கோலின் முன்ரோ 21 பந்தில் 57 ரன்கள் குவித்தார். இவர் 18 பந்தில் 50 ரன்களை கடந்தார்.
18 பந்தில் அதிவேகமாக அரை சதம் அடித்த முன்ரோ மொத்தம் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் விளாசினார்.
முன்னதாக இலங்கைக்கு எதிராக 2016ல் நடந்த போட்டியின் போது 14 பந்திலும், 2018ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 18 பந்தில் அரைசதம் அடித்து சாதித்திருந்தார்.
2007 டி20 உலக கோப்பை போட்டியின் போது இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஒவரில் 6 சிக்ஸர்கள் விளாசி உலக சாதனை படைத்தார் யுவராஜ் சிங். இந்த போட்டியில் யுவராஜ் வெறும் 12 பந்தில் அரை சதம் கடந்தது தான் இன்று வரை சாதனையாக உள்ளது.