April 26, 2017
tamilsamayam.com
லண்டனின் நடைபெற்ற தேசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் முடிசூடி சாதித்துள்ளார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஏப்ரல் 22ஆம் தேதி தேசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன் இஷ்வர் சாம்பியன் பட்டம் வென்றான்.
லண்டனில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் படிக்கும் இஷ்வர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளான்.
இந்த வெற்றியின் மூலம் வரும் ஜூன் மாதம் நேபாளத்தில் நடக்கும் உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் சார்பில் பங்கேற்கும் வாய்ப்பு இஷ்வருக்குக் கிடைத்துள்ளது.