October 14, 2017
tamilsamayam.com
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி ரத்தான போதும், ரசிகர்களை வித்தியாசமான விருந்தளித்தார் தல தோனி.
இந்தியா வந்த ஆஸ்திரேலியா 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சம நிலை வகித்தது.
இந்நிலையில் இரு அணிகள் மோதயிருந்த மூன்றாவது டி-20 போட்டி ஐதராபாத்தில் நடக்க இருந்தது. போட்டி நடக்க இருந்த மைதானத்தில் நேற்று அதிகமான மழை பெய்தது.
இதனால் மைதானம் அதிக ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின் நீண்டநேரமாகியும் மைதானத்தை முழுமையாக தயார் செய்ய முடியாத காரணத்தினால், விளையாடுவது மிகவும் ஆபத்தானது என கருதி, அம்பயர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர்.