September 15, 2017
tamilsamayam.com
இன்ஸ்டாகிராமில் புதிதாக பிறந்த தன் குழதையுடன் இருக்கும் படத்தை பதிவேற்றியுள்ளார் செரினா வில்லியம்ஸ்.
23 முறை கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸுக்கு கடந்த 1ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸுக்கும் – ரெட்டிட் துணை நிறுவனருமான அலெக்ஸிஸ் ஒஹானியன்வும் கடந்த 2016, டிசம்பர் 29ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் அவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி பிறந்த பெண் குழந்தையின் படத்தை செரினா வில்லியம்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அதில் தன் மக்ளின் பெயர் அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஒஹானியன் என குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு லட்சக்கணக்கில் லைக் தெரிவித்துள்ளனர்.