May 20, 2017
தண்டோரா குழு
17 வயதுக்குட்பட்ட இளையோருக்கான நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் இந்திய அணி, இத்தாலி அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் கால்பந்து விளையாட்டு சற்று வளர்ந்து வரும் சூழலில், இந்திய கால்பந்து வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, 17 வயதுக்குட்பட்ட இந்திய கால் பந்து அணி இத்தாலியில் உள்ள அரிஜோவில் பயிற்சி மற்றும் நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள சென்றது.
இந்நிலையில் நேற்று நடந்த இத்தாலிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கோல்கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இத்தாலி அணியை இந்தியா வீழ்த்துவது வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.
இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி விரைவில் தொடங்கப்பட உள்ளது கவனிக்கத்தக்கது.