June 30, 2017
tamilsamayam.com
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்த ஆண்டு வரும் என பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பாதுகாப்பு தற்போது சிறப்பாக உள்ளதால், இங்கு கிரிக்கெட் விளையாட மற்ற நாடுகள் வரவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் சார்யார் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்தை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட செல்ல பல நாடுகள் மறுப்பு தெரிவித்து விட்டது.
இந்நிலையில், ஐசிசி கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள், பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக சிறப்பாக இருந்தது. இதை ஐசிசி அதிகாரிகள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவித்தார். இதனால் இங்கு மற்ற நாடுகள் விளையாட வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை மற்றும் வங்கதேசத்தின் ஜூனியர் அணிகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதோடு இதற்கான 90% நடைமுறைகள் முடிந்து விட்டதாக தெரிக்கப்பட்டுள்ளது.