April 6, 2017
tamilsamayam.com
உலக கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி முன்னணி வகித்து வருகிறார் என்று புகழாரம் சூட்டி அவரது புகைப்படத்தை அட்டைப் படமாக விஸ்டன் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
இந்த நாளிதழ் இந்த வாரம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. லாரன்ஸ் பூத் என்பவர் ”தி இயர் ஃஆப் ஹிஸ் டிரீம்ஸ்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். இதில், டெஸ்ட் போட்டியாக இருக்கட்டும், ஒரு நாள் சர்வதேசப் போட்டியாக இருக்கட்டும், டுவண்டி 20 சர்வதேசப் போட்டியாக இருக்கட்டும் அனைத்திலும் முன்னணியில் இருப்பவர் கோலி என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். கடந்த 2016-2017 ஆம் ஆண்டில், டெஸ்ட், ஒரு நாள் சர்வதேசப் போட்டி, டி 20 தொடர் எதுவாக இருக்கட்டும் அனைத்திலும், இங்கிலாந்தை இந்திய அணி வெற்றி கண்டுள்ளது. மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் கோலி 235 ரன்களைக்
குவித்தார். சச்சின் டெண்டுல்கரின் வாரிசாக கோலி திகழ்ந்து வருகிறார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த இதழ் முழுவதையும் லாரன்ஸ் பூத்தான் எடிட் செய்துள்ளார். இந்த இதழில் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் பற்றியும் பூத் எழுதியுள்ளார்.
இந்த இதழ் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலியின் படத்தை அட்டைப் படமாக வெளியிட்டு கவுரவப்படுத்தி இருந்தது. இந்நிலையில் கடந்தாண்டு சிறந்த வீரராக திகழ்ந்த விராட் கோலியை கவுரப்படுத்தும் வகையில் அவரது புகைப்படத்தை அட்டைப் படமாக தற்போது வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு உண்மையில் கோலிக்கு சாதனை ஆண்டாக இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.