May 31, 2019 தண்டோரா குழு
12வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று லண்டனில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி தனது புள்ளி கணக்கை துவங்கியது.
இதையடுத்து, இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சம பலத்துடன் உள்ளதால், இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் எதிர்மறையாக வெட்ஸ் இண்டீஸ் வேகபந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 105 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வெட்ஸ் இண்டீஸ் தரப்பில் தாமஸ் விக்கெட்டுகளையும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரசல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.