August 8, 2017
tamilsamayam.com
தொடர்ந்து வெற்றியடைவதை எங்களின் வழக்கமாக மாற்றிக்கொண்டோம் என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என முன்னிலை பெற்றதுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதித்தது.
இந்த வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில்,
கடந்த 2015க்கு பின் இங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது மிகவும் சிறபான விஷயம். இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளை உள்ளூர் வெளியூர் என எப்போதும் பிரித்து பார்ப்பது இல்லை. வெற்றியடைவதை எங்களின் வழக்கமாக மாற்றிக்கொண்டோம்.’ என்றார்.