June 15, 2017
தண்டோரா குழு
விராத் ஹோலி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி பிசிசிஐ அறிவித்துள்ளது.
கேப்டன் விராத் ஹோலி தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி, 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதையடுத்து, இத்தொடரில் பங்கேற்கும் விராத் ஹோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. இதில், ரோகித் ஷர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ரிஷாப் பாண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும், இத்தொடரிலும் அணில் கும்ளேவே இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் என தெரிவிக்கபட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி:
விராத் (கேப்டன்), ஷிகர் தவாண், ரிஷாப் பாண்ட், அஜிங்க்யா ரஹானே, மகேந்திரசிங் தோனி, யுவராஜ் சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக்.