August 7, 2017
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்ஸ்ரீசாந்த் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.
இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தஸ்ரீசாந்த் தமக்கு எதிராக டெல்லி போலீஸ் தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் பி.சி.சி.ஐ. வாழ்நாள் தடை விதித்தாக குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த வழக்கில், பி.சி.சி.ஐ.க்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.