July 6, 2019 தண்டோரா குழு
17வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் தனது கடைசி லீக் போட்டியில் இந்திய அணி இன்று இலங்கை அணியுடன் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தனது முதல் விக்கெட்டை கைப்பற்றிய போது, சர்வதேச ஒருநாள் அரங்கில் பும்ரா தனது 100வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில், பும்ரா இரண்டாவது இடம் பெற்றார். இப்பட்டியலில், முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.
ஒருநாள் அரங்கில் இந்திய அணிக்காக அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள்:
56 முகமது ஷமி
57 ஜஸ்பிரீத் பும்ரா
59 இர்பான் பதான்
65 ஜாகிர் கான்
67 அஜித் அகார்கர்
68 ஜவகல் ஸ்ரீநாத்.