June 22, 2017
tamilsamayam.com
ஹாலே டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஏடிபி தொடரில் 1100வது வெற்றியை பதிவு செய்தார்.
சுவிட்சர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். சர்வதேச கிராண்ஸ்ட்லாம் டென்னிஸ் அரங்கில் அதிக முறை (18 முறை) பட்டம் வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் விரைவில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்காக தொடர்ந்து களிமண் களத்தை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் விம்பிள்டன் தொடருக்கு தயாராகும் விதமாக, ஹாலேவில் நடக்கும் ஏ.டி.பி டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பெடரர், ஜப்பானின் யூச்சி சுகிதாவை எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பெடரர், முதல் இரண்டு செட்களையும், 6-3, 6-1 என மிகச்சுலபமாக கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஏ.டி.பி., டென்னிஸ் அரங்கில் பெடரர், தனது 1100வது வெற்றியை பதிவு செய்தார்.