April 28, 2017
tamilsamayam.com
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபா நடத்தும் தோழமை கால்பந்து பயிற்சி மற்றும் மேம்பாட்டு வகுப்பிற்கு மும்பையை சேர்ந்த சுஜல் கஹர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
12 வயதான சுஜல் கஹர் மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். மும்பையில் உள்ள அரசு பள்ளியில் படித்துவரும் சுஜல் கால்பந்தில் கீப்பராக இருக்க ஆர்வமிக்கவர்.
ரஷ்யாவின் புனித பீட்டர்ஸ் பெர்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளையோருக்கான கால்பந்து பயிற்சிக்கும், அங்கு நடைப்பெறும் 8 பேர்கொண்ட கால்பந்து அணிகள் பங்கேற்கும் போட்டியும் நடைப்பெற உள்ளது.
இதில் முதல் இந்திய சிறுவனாக சுஜல் பங்கேற்கும் பெருமையை பெற்றுள்ளார்.