September 16, 2017
tamilsamayam.com
டி-20 அரங்கில் இளம் வயதில் 100 விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதனை படைத்தார் ஆப்கானிஸ்தானின் ரசித் கான்.
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரசித் கான். ஆப்கானிஸ்தான் அணிகாக அசத்தி வரும் இவர், இந்தியாவின் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.
தவிர, ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற ரசித் கான் முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் அவர் மேலும் ஒரு மைல்கல்லை எட்டி, புதிய உலக சாதனை படைத்துள்ளார். இளம் வயதில் டி-20 அரங்கில் 100 விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
இன்னும் 5 நாட்களில் தனது 19வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள ரசித் கான், இங்கிலாந்தின் டேனி பிரிக்ஸ் (23 வயது, 56 நாட்கள்) சாதனை தகர்த்தார். இப்பட்டியலில், இந்தியாவின் பும்ரா (23 வயது, 57 நாட்கள்) மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதேபோல குறைந்த டி-20 போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில், ரசித் கான் இரண்டாவது இடத்தை, இலங்கையின் அஜெந்தா மெண்டிசுடன் (66 போட்டிகள்) பகிர்ந்து கொண்டார். இதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்மர் சாண்டோக்கி (54 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார்.