January 25, 2018
tamilsamayam.com
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி, அடித்த 187 ரன்கள் 300 ரன்களுக்கு சமமானது என இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்திய அணி ஒருவிதமான போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் படுதோல்வியை சந்தித்து, தொடரை 2-0 என இழந்தது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகானஸ்பர்க்கில் நடக்கிறது. இதில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கியது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாற முதல் இன்னிங்சில் 187 ரன்களுக்கு சுருண்டது.
இதுகுறித்து புஜாரா கூறுகையில்,”முதல் டெஸ்ட் நடந்த கேப்டவுன் ஆடுகளத்தை விட மிகவும் கடினமாக இருந்தது. இந்திய அணி அடித்த 187 ரன்கள் சாதரண ஆடுகளத்தில் 300 ரன்கள் எடுத்ததற்கு சமம். ஒட்டு மொத்தமாக இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருந்தது”. என்றார்.