June 27, 2019 தண்டோரா குழு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி விரைவாக இருபதாயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார்.
உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் போட்டியில் இந்தியா -மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது விளையாடி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் 2வது வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 37 ரன்களை கடந்த போது 20,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் குறைந்த சர்வதேச போட்டிகளில் (417) 20,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
453 இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா 20 ஆயிரம் ரன்களை கடந்திருந்த நிலையில், 417 இன்னிங்சில் விராட் கோலி அதனை முறியடித்தார். முன்னதாக அதிவேகமாக 19 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.