May 4, 2019 தண்டோரா குழு
20 ஓவர் கிரிக்கெட்டை பல நாடுகளுக்கு பிரபலப்படுத்துவதற்கு வசதியாக தரவரிசை பட்டியலில் 80 நாடுகளை ஐ.சி.சி. சேர்த்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி அணிகளின் தர வரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த இந்த ஆண்டிற்கான பட்டியலை நேற்று வெளியிட்டது.
ஐ.சி.சி. உறுப்பு நாடுகள் அதாவது குட்டி அணிகள் விளையாடும் 20 ஓவர் போட்டிக்கும் சர்வதேச அந்தஸ்து வழங்குவது என்று ஐ.சி.சி. கடந்த ஆண்டு முடிவு செய்திருந்தது. அதன்படி 20 ஓவர் கிரிக்கெட்டை மேலும் பல நாடுகளுக்கு பிரபலப்படுத்துவதற்கு வசதியாக இந்த தரவரிசை பட்டியலில் 80 நாடுகளை ஐ.சி.சி. சேர்த்துள்ளது.இப்பட்டியலில்பாகிஸ்தான் 286 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
தென்ஆப்பிரிக்கா (262 புள்ளி) 2-வது இடத்திலும், இங்கிலாந்து 3-வது இடத்திலும் (261 புள்ளி), ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும் (261 புள்ளி), இந்தியா (260 புள்ளி) 5-வது இடத்திலும் உள்ளன. நேபாளம் 11-வது இடத்தில் இருக்கிறது.
அதைப்போல்,சிங்கப்பூர் (23-வது இடம்), டென்மார்க் (24), அமெரிக்கா (31), ஸ்பெயின் (41), ஜப்பான் (53), அர்ஜென்டினா (56), பிரேசில் (69) ஆகிய அணிகளும் தரவரிசையில் இடம் பெற்றுள்ளது.