March 14, 2018
tamilsamayam.com
ஐ.பி.எல். 2018ன் அதிகாரப்பூர்வ பாடல் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள், வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இதனை முன்னிட்டு, 2018-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள், வீரர்களை அறிமுகப்படுத்தும் அதிகாரபூர்வ பாடல், ஐ.பி.எல் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியானது. இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி தலைமையில் மீண்டும் களமிறங்வது தமிழக ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.