April 25, 2018
தண்டோரா குழு
2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டது.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் லண்டனில் 2019-ம் ஆண்டு மே.30-ம் தேதி துவங்கி 46 நாட்கள் நடைபெறவுள்ளன.
இந்தியா,பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா,தென்ஆப்ரிக்கா,இங்கிலாந்து,இலங்கை,ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்,உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி தொடர்பான அட்டவணையை ஐசிசி இன்று வெளியானது.
இதில்,முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து- தென்ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன.இந்தியா தனது முதல் போட்டியில் தென்ஆப்ரிக்காவை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது.மேலும்,இந்தியா பாகிஸ்தானுடன் ஜூன் 16-ம் தேதி மான்செஸ்டரில் மோதவுள்ளது.