April 15, 2020 தண்டோரா குழு
2020 ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப் படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிந்துள்ளது.
ஐபிஎல் 2020 ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டுமென்றால் பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய மைதானத்திற்குள் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது.இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்நிலையில்,ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிகள் 2வது முறையாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.