May 5, 2017
tamilsamayam.com
சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 100வது இடத்திற்கு முன்னெறியுள்ளது.ஒவ்வொரு மாதமும் கால்பந்து கூட்டமைப்பான பிஃபா சார்பில் நாடுகளுக்கான கால்பந்து தரவரிசை வெளியிடும். கடந்த ஏப்ரல் மாதம் 101வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் வழிநடத்தலில்,இந்திய கால்பந்து அணி நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றது. இந்திய அணி கடந்த 21 ஆண்டுகளுக்கு பின் 100வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 173 வது இடத்தில் இருந்த இந்திய அணி, தற்போது படிப்படியாக முன்னேறி வருகிறது. கம்போடியா மற்றும் மியான்மர் அணிகளை வீழ்த்தியதன் மூலம் கடந்த மாதம் 101வது இடத்திற்கு முன்னேறியது.
வெளி நாடுகளில் தொடர்ந்து இந்த இரண்டு வெற்றிகளைப் பெற்றதால் தற்போது நிகரகுவா, எஸ்டோனியா, லிதுவேனியா ஆகிய நாட்டு அணிகளுடன் இணைந்து 100வது இடத்தில் இந்தியா பகிர்ந்துள்ளது.
முன்னதாக 1996ம் ஆண்டு இந்தியா 94வது இடத்தில் இருந்ததே, சர்வதேச அளவில் இந்தியா இருந்த அதிகபட்ச முன்னிலை ஆகும்.