July 15, 2017
tamilsamayam.com
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அதிக வயதான வீரர் ஒருவர் இறுதிப் போட்டியில் நுழைவது இதுவே முதல் முறை என்ற சாதனையை 43 வயது ரோஜர் பெடரர் படைத்துள்ளார்.
லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசை சேர்ந்த தோமஸ் பெர்டிக்கை 7-6,7-6,6-4 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இது பெடரர் விளையாடும் 11வது விம்பிள்டன் இறுதிப்போட்டியாகும். நாளை நடைப்பெறும் இறுதிப் போட்டியில் பெடரர், முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ள மெரின் சிலிக்கை எதிர்கொள்ள உள்ளார்.
சாதனை:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 35 வயதான ஒருவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதன் முறை என்ற சாதனையை ரோஜர் பெடரர் பெற்றுள்ளார்.