March 4, 2017
tamil.samayam.com
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் 6 ஆண்டுகளுக்கு பின் இடம்பெற்றுள்ளார் அபினவ் முகுந்த்.
இவர் கடந்த 2011ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுக வீரராக களமிறங்கியவர். 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 211 ரன்கள் மட்டும் சேர்த்ததால் அடுத்தடுத்த போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த வங்க தேச போட்டியின் போது இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாட் வாய்ப்பு கிடைக்க வில்லை.
இந்நிலையில் இன்று நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறி சொதப்பினார்.
இந்த டெஸ்டில் தமிழக வீரர் முரளி விஜய் மற்றும் ஜெயந்த் யாதவ் வெளியேற்றப்பட்டு, அபினவ் முகுந்த் மற்றும் கருண் நாயர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.