• Download mobile app
05 Dec 2024, ThursdayEdition - 3221
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

9 அணிகள் 27 தொடர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிமுகம் !

July 29, 2019 தண்டோரா குழு

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஒன்பது அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டிகள் இரு நாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வருவது தான் வழக்கம். இந்த முறையை மாற்றி ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரை போன்று நடத்த ஐசிசி விரும்பியது. இதையடுத்து, இதற்கான வேலைகள் அனைத்தையும் செய்து இன்று அதிகாரப்பூர்வமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை
அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் வெளியூர் அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். அதன்படி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றன, மொத்தம் 9 அணிகள் 27 தொடர்கள், 71 டெஸ்ட் போட்டிகள் 2 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் நடைபெறும், இதில் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் இறுதிப் போட்டியில் 2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் மோதும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி இன்று அறிவித்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகளை நடத்தும் அந்தந்த நாடுகளின் வாரியங்களே இந்த போட்டிகளை ஏற்பாடு செய்யும். போட்டி நிர்வாகிகள், நடுவர்கள் ஆகியோர்களை மட்டுமே ஐசிசி தீர்மானிக்கும், அதே போல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறைகளின் கீழ் நடைபெறுவதை ஐசிசி உறுதி செய்யும்.

மேலும், இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி மார்ச் 31, 2021 வரை நடைபெறும். 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 2021ல் தொடங்கி ஏப்ரல் 30, 2023 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க