March 3, 2018
tamilsamayam.com
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 99 வயது நீச்சல் வீரர் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற காமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான தகுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 100 முதல் 104 வயது வரை உள்ளவர்களுக்கான பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் கோரோன்ஸ் கலந்துகொண்டார்.
99 வயதாகும் ஜார்ஜ் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சலில் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். 2014ஆம் ஆண்டு இதே பிரிவில் கனடா நீச்சல் வீரர் 50 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 31 விநாடிகளில் கடந்த சாதனையை முறையடித்த இவர், வெறும் 56.12 விநாடிகளில் கடந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
“நான் சிறிய வயதில் இருந்தே நீச்சல் பயிற்சி எடுக்கவில்லை. 80 வயதில்தான் நீச்சலில் ஆர்வம் வந்தது. கற்றுக்கொள்ள வயது தடையில்லையே..’’ என்று அசல்ட்டாக சொல்கிறார் ஜார்ஜ்.நீச்சல் தாத்தா ஜார்ஜ் வரும் ஏப்ரல் மாதம் 100 வயதை எட்டுகிறார்.