March 25, 2017
tamilsamayam.com
களத்தில் செயல்படும் விதத்தில் கோலியை விட ரகானே தான் பெஸ்ட்’ என ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது.
இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி, தரம்சாலாவில் நடக்கிறது. இப்போட்டி துவங்கும் முன் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது வழக்கமான வார்த்தை விளையாட்டை துவங்கிவிட்டனர்.
இதுகுறித்து ஸ்மித் கூறுகையில்,
என்னைப்பொறுத்தவரையில், இந்திய கேப்டன் கோலியை விட ரகானே எல்லா விதத்திலும் சிறந்தவர்.விராட் இல்லாத போதும் மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தினார். குறிப்பாக கோலியை விட ரொம்ப கூலானவர் ரகானே, என்றார்.