October 12, 2018
தண்டோரா குழு
இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் மூன்றாவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த 6ம் தேதி துவங்கியது.இதில் இந்தியா,சீனா உட்பட 43 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் ஷரத்குமார் 1.90 மீ உயரம் தாண்டி தங்கம் பதக்கம் வென்றார்.இதனை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பாத்தி 1.82 மீ தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றின்னர்.மேலும்,தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.
மேலும் ஆசிய பாராலிம்பிக் போட்டியில் இதுவரை 8 தங்கம்,17 வெள்ளி,25 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.