September 1, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 14வது தங்கப் பதக்கத்தை வென்றது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெற்ற 49கிலோ எடை பிரிவு குத்துசண்டைப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் டுஸ்மடோவை வீழ்த்தி இந்தியாவின் அமித் பாங்கல் தங்க பதக்கம் வென்றார்.இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 14 தங்கம்,23 வெள்ளி,29 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
மேலும்,ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முறையாக 66 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.