August 30, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்ற டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டு வெள்ளி பதக்கம் வென்ற ஓடிஷாவைச் சேர்ந்த டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றதற்காக ரூ.1.5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.