August 28, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டி போட்டிகள் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் பெற்று தந்த சாய்னா நேவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால்,பிவி சிந்து இருவரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர்.முதல் அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.36 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவிற்கு பதக்கம் பெற்று தந்த சாய்னா நேவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“ஆசிய விளையாட்டு போட்டிகளின் வரலாற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் சாய்னா நேவாலின் வெண்கலப் பதக்கம்,இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும்.நமது பேட்மிண்டன் நட்சத்திரத்தின் மற்றொரு வெற்றியை இந்தியா பாராட்டுகிறது.” என அவர் பதிவிட்டுள்ளார்.