September 4, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக விளையாட்டுகளில் பதக்கம் வென்ற மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற்றது.
இப்போட்டியில் 15 தங்கம்,24 வெள்ளி மற்றும் 30 வெண்கலம் உட்பட 69 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.இதில் 15 தங்க பதக்கங்களைப் பெற்றுத்தந்திருப்பது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.மேலும் அதிக பதக்கங்களைப் பெற்றுத்தந்த மாநிலங்களின் வரிசையில் 3வது இடத்திலும் அதிக விளையாட்டுகளில் பதக்கம் வென்ற வகையில் 2வது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது.அதிக விளையாட்டுகளில் பதக்கம் வென்றதன் அடிப்படையில் ஹரியானா மாநிலம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.