August 20, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வீரர் தீபக் குமார், வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தோனேசியாவில் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று நடைப்பெற்றது.
இதில் இந்தியா சார்பில் தீபக் குமார் கலந்துக் கொண்டு இறுதிச் சுற்றில் 10 புள்ளிகளுக்கு 8 புள்ளிகளை பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றார்.ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை,ஒரு தங்கம்,ஒரு வெள்ளி,ஒரு வெண்கலப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.