January 31, 2017
tamilsamayam.com
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பார்த்தீவ் படேல், சஹா இருவரும் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இங்கிலாந்து தொடருக்கு பின் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் (பிப்ரவரி 23-27) புனேயில் நடக்கிறது. அடுத்த 3 போட்டிகள் பெங்களூரு (மார்ச் 4-8), ராஞ்சி (மார்ச் 16-20), தரம்சாலாவில் (மார்ச் 25-29) இடங்களில் நடக்கவுள்ளது.
இதற்கு முந்தைய கேப்பில் இந்தியா, வரும் வங்கதேச அணி, பிப்ரவரி 9-13 வரை ஒரே ஒரு டெஸ்டில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்க சமீபத்தில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்திய சஹா, பார்த்தீவ் படேல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
இத்தொடருக்கான அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் தயாராகிவருகின்றனர். இதில் விக்கெட்கீப்பராக சஹா தேர்வு செய்யப்படலாம் என தெரிவித்துள்ளனர். இவருடன் பார்த்தீவ் படேலும் தேர்வு செய்யப்படவுள்ளார்.
இவர்களை தவிர, விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட ரகானே, அணிக்கு மீண்டும் திரும்புவார். கே.எல்.ராகுல், புஜாரா, கருண் நாயர் ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்து கொள்வது உறுதியாகியுள்ளது.