February 9, 2017
tamilsmayam.com
இந்திய வீரர் புஜாராவுக்கு எதிராக வங்கதேச வீரர்கள் காமெடியாக அப்பீல் செய்தனர்.
இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன், வங்கதேச அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணி, பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது.
இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் கே.எல்.ராகுல் (2) சொதப்பலான முறையில் போல்டானார்.
இதன்பின் வந்த புஜாராவுக்கு, பந்து அவரை விட்டு வெகு தூரத்தில் சென்றபோதும், அம்பயரிடம் அவுட்கேட்டு காமெடியான ஒட்டு மொத்த வங்கதேச வீரர்களும் அப்பீல் செய்தனர். முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் (7), புஜாரா (9) அவுட்டாகாமல் உள்ளனர்.