January 25, 2017
tamilsamayam.com
உச்சநீதிமன்ற சிறப்புக்குழுவுடன் தாங்களும் தனியே நிர்வாகிகள் பெயரைப் பரிந்துரைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இருந்த அனுராக் தாகூரை உச்சநீதிமன்றம் அண்மையில் பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து, பிசிசிஐ அமைப்புக்கு புதிய நிர்வாகிகளாக தகுதியான நபர்களைப் பரிந்துரைக்க உச்சநீதிமன்றம் குழு ஒன்றையும் அமைத்தது.
கோகுல் சுப்ரமணியம் மற்றும் அனில் திவான் ஆகிய இருவர் அடங்கிய அந்த குழு ஜனவரி 20ஆம் தேதி 9 பேர் கொண்ட பெயர்ப்பட்டியலை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. சீல் வைக்கப்பட்ட உரையில் இந்தப் பரிந்துரை அறிக்கை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பிசிசிஐ நிர்வாகிகளாக சிலரது பெயரை தாங்களும் சீல் செய்த உரையில் சமர்ப்பிக்க அனுமதி கோரி பிசிசிஐ சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதனை ஏற்று, நிர்வாகிகளைப் பரிந்துரைக்க பிசிசிஐ-க்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும், உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புக்குழு சார்பில் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட டபரிந்துரையில் 70 வயதைக் கடந்தவர்களும் இருப்பதால் அந்தப் பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் சிறப்புக்குழுவும் பிசிசிஐ-யும் புதிய பெயர் பரிந்துரைகளை சீல் செய்த உரையில் தனித்தனியே அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.