February 15, 2017
tamilsamayam.com
ஹாங்காங்கில் நடக்கும் டி20 தொடரில், பங்கேற்கயிருந்த இந்தியாவின் யூசுப் பதானுக்கு பி.சி.சி.ஐ., திடீரென அனுமதி மறுத்துள்ளது.
ஹாங்காங்கில் நடக்கவுள்ள உள்ளூர் டி-20 தொடரில் இந்திய வீரர், யூசுப் பதான், பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீரரானார் யூசுப் பதான்.
இதற்காக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இடம் அனுமதி கேட்டிருந்த யூசுப் பதானுக்கு பி.சி.சி.ஐ., முதலில் அனுமதி வழங்கியதாக அறிவித்தது. ஆனால் தற்போது அதை பி.சி.சி.ஐ., வாபஸ் பெற்றுள்ளது. இதனால் யூசுப் பதான் நொந்து போய்யுள்ளதாக தெரிகிறது. இதேபோல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், கரீபிய தீவிகளில் நடக்கும் கரீபியன் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் பதானின் விண்ணப்பத்தின் முடிவால் அவரது நிலையும் தற்போது தெரியவந்துள்ளது.