April 20, 2017
tamilsamayam.com
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், உலக சாதனை படைத்த பெங்களூரு வீரர் கிறிஸ் கெயில் பிரபலமான சால்ட் பே ஸ்டைலில் கொண்டாடினார்.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த 20வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின.
இதில் பெங்களூரு அணிக்கு, துவக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில், 3 ரன்கள் எட்டிய போது, ஒட்டு மொத்த டி-20 அரங்கில் 10,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இம்மைல்கல்லை தொட்ட முதல் வீரர் என்ற உலகசாதனை படைத்த கெயில் இந்த போட்டியில் 77 ரன்கள் விளாசினார்.
‘அவுட் ஆப் பார்மில்’ இருந்த கெயில், இழந்த பார்ம் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் மைதானத்தில் மண்டியிட்டு எதோ வித்தியாசமான செய்கை செய்ததை காணமுடிந்தது. அவர் என்ன விதமான ஸ்டைலில் தனது மகிழ்ச்சியை கொண்டாடினார் என்ற விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.