May 19, 2017
tamilsamayam.com
தாய்லாந்து நாட்டில் நடந்த ஆசிய அளவிலான யோகா போட்டியில் கோவையை சேர்ந்த வைஷ்ணவி ஜூனியர் பிரிவில் இரு தங்கப்பதக்கம் வென்றதோடு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.
கோவை தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் வைஷ்ணவி. இவர் தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த 13-15 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டார். இதில் பல்வேறு யோகாவை நேர்த்தியாக செய்து இரண்டு தங்கப்பதங்கங்களை வென்றதோடு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். இந்தியா சார்பில் சில சிறுமிகளும், ஆசிய நாடுகளை சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்ட போட்டியில் வைஷ்ணவி ஜொலித்துள்ளார்.
வைஷ்ணவி பேசியதாவது:
நான் இதுவரை 1000க்கும் மேற்பட்ட யோகா போட்டியில் கலந்து கொண்டுள்ளேன். 200க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வென்றுள்ளேன். அதில் பெங்களூரு, கொச்சி, குஜராத ஆகிய இடங்களில் நடந்த தேசிய யோகா போட்டிகளும் அடங்கும். 150க்கும் மேற்பட்ட நாடுகளில் நடந்த யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளேன்.
யோகா மூலம் கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே என் லட்சியம். எனக்கு யோகா ராணி, யோகா நட்சத்திரம் உள்ளிட்ட பட்டங்களை வாங்கியுள்ளேன்.
யோகா மூலம் பெருமையை சேர்க்கும் வைஷ்ணவிக்கு இலவச கல்வி அளிப்பதோடு, அவரது அனைத்து முயற்சிக்கும் ஆதரவளிக்கும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.